இஸ்லாம், மன்னரை அல்லது ஒரு நாட்டின் தலைவரைச் சட்டத்துக்கு மேலானவராக எந்த இடத்திலும் குறிப்பிடவில்லை என பாஸ் தலைவர் அப்துல் ஹாடி ஆவாங் கூறினார்.
“முகம்மது நபி ரசுலல்லா (இறைத் தூதர்) ஆனபோது அவர் தம்மை இறைவனாக பாவித்துக்கொள்ளவில்லை, மக்களை அடிமையாக்கவில்லை, நாட்டின் வளத்தைத் தமக்குச் சொந்தமாக்கிக் கொள்ளவில்லை.
“இஸ்லாமிய வரலாற்றில் நாட்டின் தலைவர்களும் மன்னர்களும் கலீபாக்களும் அமீர்களும் முழு அதிகாரம் படைத்தவர்களாக, சட்டத்துக்கு மேலானவர்களா இருந்ததில்லை என்பதற்கு நிறைய உதாரணங்களைக் காண்பிக்க முடியும்.
“ சட்டத்துக்கு மேலானவர்கள் என்ற கருத்தை (இஸ்லாம்) நிராகரிக்கிறது”, என ஹாடி ஹராகா ஆன்லைனில் பதிவிட்டிருந்தார்.