உம்ராவை நிறைவேற்றுவதற்காக நீதிமன்றத்திடமுள்ள தன் கடப்பிதழ் திருப்பிக் கொடுக்கப்பட வேண்டும் என்று முன்னாள் துணைப் பிரதமர் அஹமட் ஜாஹிட் மனுச் செய்திருந்தார்.
ஆனால் , முஸ்லிம்களுக்கு உம்ரா கட்டாயக் கடமையல்ல என்பதால் கோலாலும்பூர் உயர் நீதிமன்றம் அவரது மனுவைத் தள்ளுபடி செய்தது.
ஜாஹிட் பல குற்றச்சாட்டுகளை எதிர்நோக்குவதால் கடப்பிதழைக் கொடுப்பதற்கில்லை என நீதிபதி கோலின் சிகுவேரா கூறினார்.
ஜாஹிட், நம்பிக்கை மோசடி, பணச் சலவை, ஊழல் என 47 குற்றச்சாட்டுகளை எதிர்நோக்குகிறார்.