ரமலான் மாதத்தில் உணவகங்களை இரவில் தற்காலிகமாக மூட மாநில அரசு உத்தரவு

கிளந்தானில் உள்ள உணவகங்கள் நோன்பு மாதத்தில் இரவு மணி 8.30-இலிருந்து 10மணிவரை தற்காலிகமாக மூடப்பட வேண்டும்.

மாநில அரசு, மாநிலச் செயலகம் வழி அதற்கான உத்தரவைப் பிறப்பித்திருந்தது.

ரமலான் மாதத்தில் முஸ்லிம்கள் தராவி தொழுகை செய்வதை ஊக்குவிக்கவே அவ்வாறு செய்யப்படுவதாக அரசின் அறிக்கை கூறியது.

அப்படி ஒரு உத்தரவு பிறப்பிக்கப்பட்டதை பாஸ் மத்திய செயல்குழு உறுப்பினர் நிக் அப்டு நிக் அப்துல் அசீஸ் ஏற்கவில்லை.

இந்த உத்தரவு மீட்டுக்கொள்ளப்பட வேண்டும் என்றவர் விருப்பம் தெரிவித்தார்.

“ரமலான் மாதத்தில் ஹலாலான, நியாயமான வியாபாரத்தை ஊக்குவிக்க வேண்டுமே தவிர தடுக்கக் கூடாது”, என்றாரவர்.