வாரிசான் கட்சி அதன் கட்சித் தொண்டர்களை ஒரு போலீஸ் படகில் பூலாவ் பெர்ஹாலாவுக்குக் கொண்டுசென்றதை பெர்சே கண்டித்துள்ளது.
சாபா முதலமைச்சர் ஷாபி அப்டாலின் கட்சி உறுப்பினர்கள் தேர்தல் பரப்புரைக்காக சண்டாகானின் மேற்குக் கரைக்கு அப்பால் உள்ள தீவுக்குப் போலீஸ் படகு ஒன்றில் சென்றார்கள் என்றும் படகை ஒரு போலீஸ் அதிகாரி ஓட்டிச் சென்றார் என்றும் அந்தத் தேர்தல் கண்காணிப்பு அமைப்பு கூறிற்று.
முதலமைச்சரின் அரசியல் செயலாளர் ஜோ-அன்னா சூ ரம்பாஸ் அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவேற்றம் செய்துள்ள காணொளியில் இது தெரிகிறது.
இப்போது காணொளி அங்கில்லை, அகற்றப்பட்டு விட்டது என்று பெர்சே கூறியது.
அரசாங்கச் சொத்தைத் தேர்தல் பரப்புரைகளுக்குப் பயன்படுத்தியது ஒரு அப்பட்டமான தவறு, “புதிய மலேசியாவில், புதிய சாபாவில் அவ்வாறு நடக்கக்கூடாது” என்றது ஓர் அறிக்கையில் கூறியது.