சண்டாகான் இடைத் தேர்தல்: நண்பகல்வரை 32 விழுக்காட்டினர் வாக்களித்தனர்

சண்டாகான் இடைத் தேர்தலில் இன்று நண்பகல் வரை வாக்களித்தோர் எண்ணிக்கை 32 விழுக்காடு ஆகும்.

39,684 வாக்காளர்களைக் கொண்ட அத்தொகுதியில் 70விழுக்காட்டினராவது வாக்களிக்க வருவார்கள் என்று தேர்தல் ஆணையம் எதிர்பார்க்கிறது.

காலையில் வானிலை நன்றாக இருந்தது. பிற்பகலில் பல இடங்களில் இடியுடன்கூடிய மழை பெய்யலாம் என வானிலை ஆய்வுத் துறை ஆருடம் கூறியுள்ளது.

-பெர்னாமா