சண்டாகானில் வாக்குகள் விலைக்கு வாங்கப்பட்டன-பங்

நேற்றைய சண்டகான் இடைத் தேர்தலில் வாக்குகள் பணம் கொடுத்து வாங்கப்பட்டனவாம். சாபா அம்னோ தலைவர் பங் மொக்தார் ரடின் கூறிக்கொள்கிறார்.

“சில வாக்காளர்கள் பணம் கொடுக்கப்பட்டதாகக் கூறினார்கள். அவர்களின் குற்றச்சாட்டுகள் உணமையா என்று ஆராய்கிறோம்”, என்றவர் கூறியதாக த ஸ்டார் அறிவித்துள்ளது.

நேற்று நடந்த சண்டாகான் நாடாளுமன்றத் தொகுதி இடைத் தேர்தலில் டிஏபி-இன் விவியான் வொங் 11,521 வாக்குகள் பெரும்பான்மையில் பிபிஎஸ்-இன் லிண்டா ட்சென்னையும் மேலும் மூன்று சுயேச்சைகளையும் தோற்கடித்தார்.

பிஎன் ஆதரவைப் பெற்றிருந்த ட்சென்னுக்கு 4491 வாக்குகள் மட்டுமே கிடைத்தன.