சிசிஐடி தலைவர் மஸ்லான் மன்சூர் துணை ஐஜிபி-ஆக நியமனம்

புக்கிட் அமான் வணிகக் குற்றவியல் புலனாய்வுத் துறை(சிசிஐடி) இயக்குனர் மஸ்லான் மன்சூர் துணை இன்ஸ்பெக்டர்-ஜெனரல் அப் பலீசாக நியமிக்கப்பட்டுள்ளார்.

அப்துல் ஹமிட் படோரின் இடத்துக்கு அவர் நியமிக்கப்பட்டுள்ளார். அவரது நியமனம் மே 5-இலிருந்து அமலுக்கு வருகிறது.

படோர் மே 4-இல் இன்ஸ்பெக்டர்- ஜெனரல் அப் போலீசாக பணி உயர்வு பெற்றார்.

மஸ்லான் இவ்வாண்டு ஜனவரி இறுதியில்தான் சிசிஐடி தலைவராக பணி அமர்த்தப்பட்டார். அதற்குமுன்பு அவர் சிலாங்கூர் போலீஸ் தலைவராக இருந்தார்.