கெராக்கான் தலைவர் டொமினிக் லாவ், மெட்ரிகுலேசன் கல்வியை அகற்றிவிட்டு எஸ்டிபிஎம் தேர்வைப் பல்கலைக்கழக நுழைவுக்கான பொதுவான தகுதியாக வைக்க வேண்டும் என்று கூறுகிறார்.
எது சரியோ அதைச் செய்யும் அரசியல் துணிவு பக்கத்தான் ஹரப்பானுக்கு வேண்டும் என்றவர் ஓர் அறிக்கையில் கூறினார்.
“மாணவர்கள், எல்லாருமே மலேசியர்களே, அவர்கள் நியாமற்ற முறையில் நடத்தப்படுவதை நிறுத்துவது அரசியல் ரீதியில் சரியான நடவடிக்கையாகவே அமையும்.
“அது ‘புதிய மலேசியாவை’ உருவாக்கும் நோக்கம் கொண்ட ஹரப்பான் அரசாங்கத்தில் இனவேறுபாடற்ற நிர்வாகம் தொடங்குகிறது என்பதற்கான அறிகுறியாகவும் அமையும்”, என்றவர் கூறினார்.
த மலேசியன் இன்சைட்டிடம் பேசிய முன்னாள் பெருமக்கள் மன்றத்தின் தலைவர் டயிம் சைனுடின், மெட்ரிகுலேசன் இக்காலத்துக்குப் பொருத்தமான ஒன்றல்ல என்றாலும் அதை அகற்றுவது அரசியல் தற்கொலைக்கு ஒப்பானது என்று கூறியதற்கு எதிர்வினையாக லாவ் அந்த அறிக்கையை வெளியிட்டிருக்கிறார்.