அமைச்சர்களும் கட்சித் தலைவர்களாக உள்ள அரசுப் பணியாளர்களும் வேலை நேரத்தில் தேர்தல் பரப்புரைகளில் ஈடுபட விரும்பினால் விடுப்பு எடுத்துக்கொண்டு அதைச் செய்யலாம் என பெர்சே பரிந்துரைத்துள்ளது.
தேர்தல் ஆணையத்தின் தேர்தல் பரப்புரைக் கட்டுப்பாடுகள் அமைச்சர்கள் வேலை நேரத்தில் பரப்புரை செய்வதைத் தடுப்பதாக பிரதமர் டாக்டர் மகாதிர் முகம்மட் குறைப்பட்டுக் கொண்டிருப்பதற்கு எதிர்வினையாக பெர்சே முன்வைத்துள்ள பரிந்துரைகளில் இதுவும் ஒன்றாகும்.
விடுப்பு எடுப்பதைத் தவிர்த்து பெர்சே முன்வைத்துள்ள மற்ற பரிந்துரைகள் வருமாறு:
-தேர்தல் பரப்புரைக்கு அமைச்சர்கள் அவர்களின் அதிகாரப்பூர்வமான வாகனம், ஓட்டுநர், நியாயமான எண்ணிக்கையில் பாதுகாப்பு அதிகாரிகள் ஆகிய அரசாங்கச் சொத்துகளை மட்டுமே பயன்படுத்தலாம்.
-பிரதமர் அரசாங்க விமானத்தைப் பயன்படுத்தலாம் ஆனால், பிரதமரும் அவரது பரிவாரங்களும் அதற்குரிய முதல்-வகுப்புக் கட்டணம் செலுத்திவிட்டு அதைப் பயன்படுத்தலாம்.
-அரசியல் கட்சிகளுக்கு அவை பெறும் வாக்குகளுக்கு ஏற்ப அரசாங்கப் பணத்திலிருந்து நிதியுதவி வழங்கும் ஒரு திட்டத்தைப் பக்கத்தான் ரக்யாட் அமல்படுத்த வேண்டும்.
நேற்று மகாதிர் முகம்மட், அரசாங்கச் சொத்துகளைப் பயன்படுத்துவது மீதான இசியின் விதிமுறைகளைக் குறைகூறி இருந்தார்.
கேமரன் மலை இடைத் தேர்தல் பரப்புரைக்குச் சென்றபோது தாம் சொந்தத்தில் ஒரு ஹெலிகாப்டரை ஏற்பாடு செய்து கொள்ள வேண்டியதாயிற்று என்றாரவர்.