அன்வாரைத் தற்காக்கிறார் அஸ்மின்

அன்வார் இப்ராகிம் ஒரு முன்னாள் கைதி என்பதால் அவர் பிரதமர் பதவிக்குத் தகுதியானவர்தானா என்று பாஸ் தலைமைச் செயலாளர் தகியுடின் ஹசான் கேள்வி எழுப்பியது பொறுப்பற்றதனம் என்று பிகேஆர் துணைத் தலைவர் முகம்மட் அஸ்மின் அலி கூறினார்.

பிகேஆர் தலைவர் அரச மன்னிப்பு பெற்றார் என்பதையும் மறந்து டஹ்கியுடின் அவ்வாறு கூறியது நியாயமற்றது என்றாரவர்.

மக்களுக்குத் தெரியும் அன்வார்மீதான குற்றச்சாட்டுகள் அரசியல் நோக்கம் கொண்டவை என்பது அதனால்தான் அவருக்கு மன்னர் முழு மன்னிப்பு அளித்தார்.

“நமக்கு வெவ்வேறு அரசியல் கருத்துகள் இருக்கலாம், ஆனால், உண்மையை மறந்துவிடக்கூடாது. உண்மை என்னவென்றால் இவ்விசயத்துக்கு நாட்டின் நலன் கருதி ஒரு சரியான தீர்வு காணப்பட்டது”, என்றவர் நேற்றுக் கூறினார்.

தகியுடின், கடந்த புதன்கிழமை சண்டாகான் இடைத் தேர்தலுக்குப் பரப்புரை செய்து கொண்டிருந்தபோது அன்வாரைப் போன்ற ஒரு முன்னாள் கைதி பிரதமர் ஆவதை மக்கள் விரும்புகிறார்களா என்று கேட்டிருந்தா