மலேசியத் தொழிலாளர்களை ஜப்பானுக்கு அனுப்புவதற்கான ஒப்பந்தம் இன்னும் இறுதி செய்யப்படவில்லை

மலேசியா ஜப்பானுடன் செய்துகொள்ளவுள்ள ஒத்துழைப்புக் குறிப்பாணை இன்னும் இறுதி செய்யப்படவில்லை என மனிதவள அமைச்சர் எம்.குலசேகரன் கூறினார். அந்தக் குறிப்பாணை மலேசியா அதன் தொழிலாளர்களை ஜப்பானுக்கு அனுப்ப வகை செய்யும்.

“ஜப்பானுடனான எம்ஓசி வரையப்பட்டுக் கொண்டிருக்கிறது. இன்னும் இறுதி செய்யப்படவில்லை”, என்றவர் ஓர் அறிக்கையில் கூறினார்.

மலேசியர்களுக்கு வெளிநாட்டில் நல்ல வேலை கிடைக்கிறதென்றால் அதற்குத் தடங்கலாய் இருப்பது நியாயமல்ல. முறையான உடன்படிக்கை செய்துகொள்ளாவிட்டால் மலேசியர்கள் வேலை தேடி வெளிநாடு செல்ல மாட்டார்கள் என்று நினைப்பதும் முட்டாள்தனம்.

“முறையான உடன்படிக்கை இருப்பது கூடுதல் பாதுகாப்பு, மலேசியர்களின் நிலவரங்களைத் தொடர்ந்து கண்காணித்து வர முடியும்”, என்று குலசேகரன் தெரிவித்தார்.

இப்போதைக்கு கிட்டத்தட்ட 1மில்லியன் மலேசியர்கள் வெளிநாடுகளில் வேலை செய்கிறார்கள் என்று கூறிய அவர், சிங்கப்பூரில் மட்டும் 500,000 மலேசியர்கள் வேலை செய்கின்றனர் என்றார்.