உயர்க்கல்விக் கடன் நிதிக்கழகம் பிடிபிடிஎன், கடனைச் செலுத்தாதவர்களுக்கு முன்னர் செய்ததுபோல் பயணத் தடை விதிக்கலாமா என்று ஆலோசிக்கிறது.
கல்விக் கடனைத் திரும்பப் பெறப் பல்வேறு வழிகள் ஆராயப்படுவதாக ஊடகங்களுக்காக நடத்தப்பட்ட ஒரு விளக்கமளிப்புக் கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது.
பிடிபிடிஎன் அமைச்சரவையிடம் பல பரிந்துரைகளை முன்வைத்துள்ளது என்றும், அவற்றுள் கடன் செலுத்தாதவர்கள் அவர்களின் கடப்பிதழ், வாகனமோட்டும் உரிமம், சாலை வரி, வர்த்தக உரிமம் ஆகியவற்றைப் புதுப்பிப்பதைத் தடுப்பது போன்றவையும் அடங்கும் என்றும் அதன் துணத் தலைமை செயல் அதிகாரி மஸ்தூரா முகம்மட் காலிட் கூறினார்.
இவை தவிர, சம்பளத்தில் பிடித்தம் செய்யலாம், அமலாக்கத்தைக் கடுமைப்படுத்தலாம், உத்தரவாதமளிப்போர் தேவை என்று வலியுறுத்தலாம் என்பன போன்ற ஆலோசனைகளும் பிடிபிடிஎன்னிடம் தெரிவிக்கப்பட்டிருப்பதாக மஸ்தூரா கூறினார்.