பினாங்கு பயனீட்டாளர் சங்கத் தலைவர் எஸ்எம் முகமட் இட்ரிஸ் காலமானார்

பினாங்கு பயனீட்டாளர் சங்கம் மற்றும் மலேசியச் சுற்றுச்சூழல் நண்பர்கள் (சஹாபாட் ஆலாம் மலேசியா) இயக்கத்தின் தலைவருமான எஸ்எம் முகமட் இட்ரிஸ், மாரடைப்பு காரணமாக இன்று இயற்கை எய்தினார். அன்னாருக்கு 93 வயது.

முன்னதாக, மூச்சுத் திணறல் காரணமாக அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

இன்று மாலை மணி 4.45 அளவில், பினாங்கில், ஒரு தனியார் மருத்துவமனையில் அன்னாரில் உயிர் பிரிந்தது. அவருக்கு நான்கு மகள்கள் இருக்கின்றனர்.

அவரது வாழ்நாளில், பாரிசான் மற்றும் ஹராப்பான் இரு அரசாங்கங்களுக்கு எதிராகவும் உரக்கக் குரல் கொடுத்து வந்துள்ளார்.

குறிப்பாக, பினாங்கு மாநிலத்தில், பினாங்கு போக்குவரத்து பெருந்திட்டம் மற்றும் தென் பினாங்கில் கடல் தூர்த்தல் போன்றவற்றிற்கு எதிராக, கடுமையாகக் குரல் எழுப்பி வந்தார்.