அருண் காசி அடுத்த வாரம் விடுதலை

நீதிமன்றத்தை அவமதித்த குற்றத்துக்காக 30-நாள் சிறையிடப்பட்ட வழக்குரைஞர் அருண்(அருணாசலம்) காசி செவ்வாய்க்கிழமை விடுவிக்கப்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அவரை வரவேற்க வழக்குரைஞர் குழு ஒன்று காஜாங் சிறைச்சாலைக்குச் செல்லும் என்று அவரின் வழக்குரைஞர் ஜோய் அப்புக்குட்டன் மலேசியாகினியிடம் தெரிவித்தார்.

“அருண் செவ்வாய்க்கிழமை விடுவிக்கப்படுவார் என்று கூறும் காஜாங் சிறைச்சாலைத் துறை கடிதம் ஒன்று நேற்று கிடைக்கப் பெற்றது”, என்றாரவர்.

ஏப்ரல் 23-இல், கூட்டரசு நீதிமன்றம், ஒரு வழக்கில் வழங்கப்பட்ட தீர்ப்பை விமர்சித்து இரண்டு அறிக்கைகள் விடுத்ததன்வழி அருண் நீதிமன்றத்தை அவமதித்து விட்டதாகக் கூறி 30-நாள் சிறைத்தண்டனையும் ரிம40,000 தண்டமும் விதித்தது.