“அம்னோ அதிகாரத்தை இழந்தால் மலாய்க்காரர்கள் அதிகாரத்தை இழப்பர் எனத் துணைப் பிரதமர் சொல்வது மிக மிக பொறுப்பற்றதாகும். அது அப்பட்டமான பொய்.”
முஹைடின்: 13வது பொதுத் தேர்தல் மலாய்க்காரர்களுக்கு மிக முக்கியமான தேர்தல்
பார்வையாளன்: அம்னோ பொதுப் பேரவையில் முஹைடின் யாசின் ஆற்றிய உரையில் சில பகுதிகள்:
13வது பொதுத் தேர்தல் மலாய்க்காரர்கள் வீழ்ச்சி காண்பார்களா அல்லது எழுச்சி அடைவார்களா என்பதை நிர்ணயிக்கப் போவதால் அந்தத் தேர்தல், இது வரை நிகழ்ந்துள்ள அனைத்துத் தேர்தல்களையும் விட முக்கியமானது.”
அரசியல் அதிகாரம் தொடர்ந்து நமது கரங்களில் இருக்குமா அல்லது மற்றவர்களிடம் போய் விடுமா?”
“அரசியல் அதிகாரம் இழக்கப்பட்டு புத்ராஜெயாவை எதிர்க்கட்சிகள் வெற்றி பெறுவதைக் காண நீங்கள் விரும்புகின்றீர்களா? மலாய்க்காரர்கள் தங்கள் சொந்த மண்ணில் அதிகாரத்தை இழப்பதைக் காண நாம் தயாராக இருக்கிறோமா? நிச்சயம் அதற்குப் பதில், இல்லை என்பதாகும்.”
“இதனை நம்புங்கள். சமயம், இனம், நாடு ஆகியவற்றுக்காக அம்னோ போராடுகிறது.”
இந்த வெறுக்கத்தக்க அப்பட்டமான இனவாதக் கருத்துக்களுக்கு எளிய பதில் இதுதான். அடுத்த பொதுத் தேர்தலில் பக்காத்தான் ராக்யாட் வெற்றி பெறுமானால் நாட்டுக்குத் தூய்மையான அரசாங்கம் கிடைக்கும். அதனை ஆற்றல்மிக்க மலேசியத் தலைவர்கள் வழி நடத்துவர். அவர்களில் பெரும்பாலோர் மலாய்க்காரர்கள் என்பது நிச்சயம்.
2011ம் ஆண்டு மலேசியாவின் மொத்த வருமானம் 183 பில்லியன் ரிங்கிட். அதில் மூன்றில் ஒரு பங்கை ஊழலான பிஎன் தலைவர்களும் அவர்களுடைய தோழர்களும் திருடி விட்டனர். பக்காத்தான் ஆட்சிக்கு வந்தால் திருடப்பட்ட அந்த 60 பில்லியன் ரிங்கிட்டை அல்லது அதற்கு மேற்பட்ட தொகையை மக்கள் நன்மைக்கு பயன்படுத்தலாம்.
ஹெர்மிட்: அம்னோ துணைத் தலைவர் குறிப்பிட்டுள்ள தூய்மை, உண்மையான போக்கு, கௌரவம், உயரிய தார்மீகப் பண்புகள் அம்னோ தலைவர்களிடம் இருந்தால் பிகேஆர், பாஸ் போன்ற கட்சிகள் வெளிச்சத்தையே பார்த்திருக்க முடியாது.
அம்னோ தலைவர்கள் கடந்த 50 ஆண்டுகளுக்கு மேலாக தங்களது சொந்த இனத்திற்கே தீங்கு விளைவித்திருப்பதால் மலாய் பகுதிகளில் பக்காத்தான் ஊடுருவ முடிந்துள்ளது.
உறுதியான மாற்றத்தை முடிவு செய்து விட்ட, அனைத்து இன மலேசியர்களும் நிச்சயம் மாறப் போவதில்லை. முடிவு செய்யும் நேரம் வெகு விரைவில் வந்து விடும்.
கர்மா: அம்னோ பொதுப் பேரவையில் கிரிஸ் கத்தியை முத்தமிட்ட மனிதரை “நாசி லெமாக் 2.0” என்னும் படத்தில் அப்லின் சாவ்கி என்னும் மலாய்க்காரர் கூட கேலி செய்துள்ளார்.
நமக்குத் தெரிந்த வரை சரவாக் மக்களும் சபா மக்களும் தான் கடந்த பொதுத் தேர்தலில் அம்னோ/பிஎன் ஆட்சியில் நிலைத்திருக்க உதவியுள்ளனர். துணைப் பிரதமர் தனது வேண்டுகோளை ஏன் மலாய்க்காரர்களுக்கு மட்டும் விடுத்துள்ளார். இந்தியர்கள், சீனர்கள் பற்றி என்ன சொல்வது ?
சரவாக்டயாக்ஸ்: அம்னோ அதிகாரத்தை இழந்தால் மலாய்க்காரர்கள் அதிகாரத்தை இழப்பர் எனத் துணைப் பிரதமர் சொல்வது மிக மிக பொறுப்பற்றதாகும். அது அப்பட்டமான பொய்.
அம்னோ அதிகாரத்தை இழந்து பக்காத்தான் ஆட்சிக்கு வந்தால் கூட்டரசு அரசாங்கமும் மலாய் பெரும்பான்மை உள்ள மாநிலங்களும் மலாய்க்காரர்களினால் மட்டுமே வழி நடத்தப்படும்.
அம்னோ விரக்தி அடைந்துள்ளது தெளிவாகத் தெரிகிறது. மலாய்க்காரர்களுடைய ஆதரவைப் பெறுவதற்காக அது இன, சமய உணர்வுகளைத் தூண்டி விடுகிறது. பிரதமர் நஜிப் ரசாக்கின் ஒரே மலேசியா செத்துப் போய் விட்டது என்பதே அதன் பொருள்.
ஸ்விபெண்டர்: மலாய்க்காரர்களுக்கான உண்மையான மருட்டல் மலாய் அல்லாத மலேசியர்களிடமிருந்து வரவில்லை. மாறாக தனது அரசியல் அதிகாரத்தைத் தக்க வைத்துக் கொள்ள குடியுரிமையை அம்னோ அந்நியர்களுக்கு விற்பதே பெரிய மருட்டல்.
சபாவில் இந்தோனிசியர்களும் பிலிப்பினோக்களும் கடந்த 30 ஆண்டுகளாக குடியாக்கம் செய்யப்பட்ட பின்னர் இப்போது அங்கு அதிகமான “அந்நிய மலேசியர்களே” உள்ளனர். அதற்காக நடத்தப்பட்ட அடையாளக் கார்டு திட்டம் என்ற எம் திட்டத்தை அம்னோ இப்போது மறைமுகமாக தீவகற்பத்திலும் மேற்கொண்டு வருகிறது.
நமது தேசிய ஆட்சியுரிமைக்கும் மலாய்க்காரர்களுக்கும் உண்மையான துரோகி அம்னோ ஆகும். அந்த அந்நிய பூமிபுத்ராக்கள் மலாய்க்காரர்களுடன் சிறப்பு உரிமைகளுக்கும் சலுகைகளுக்கும் போட்டியிடப் போகின்றனர். அவர்களுக்கு மலாய் சுல்தான்கள் மீது விசுவாசம் கிடையாது. அவர்களுக்குச் சிறப்பு உரிமைகளும் சலுகைகளுமே மிக முக்கியம். வேறு ஒன்றுமில்லை.
சாதாரண மலாய்க்காரர்கள் மீது அம்னோவுக்கு அக்கறை இல்லை. இந்த நாட்டின் வளப்பத்தைச் சுரண்டுவதற்கும் கொள்ளையடிப்பதற்கும் அரசியல் அதிகாரத்தைத் தக்க வைத்துக் கொள்வதே அம்னோ நோக்கமாகும்.
கேஎஸ்என்: அம்னோ அச்சத்தில் மூழ்கியுள்ளது முஹைடின் விடுத்த வேண்டுகோள் தெளிவாகக் காட்டுகிறது. நேர்மையாக தேர்தலில் வெற்றி பெற முடியாது என்பது அதற்குத் தெரிந்து விட்டது. கடந்த காலத்தில் அது செய்த பாவங்கள் இப்போது அதனை வாட்டுகின்றன.
ஷானாண்டோவா: முஹைடின் ஆற்றில் தத்தளிக்கும் மனிதர். உயிர்வாழ அவர் எதனையும் பிடித்துக் கொள்வார். இப்போது அவர் சமயத்தையும் இனத்தையும் பிடித்துக் கொண்டிருக்கிறார்.
அவை அம்னோவையும் பிஎன் -னையும் காப்பாற்றப் போவதில்லை. மலேசிய பல இனங்களைக் கொண்ட நாடு. அதுதான் உண்மை. மலாய்க்காரர்களை ஏமாற்ற வேண்டாம்.