சீரியாவில் பயங்கரவாத நடவடிக்கைகளில் ஈடுபட்ட சந்தேகத்தின்பேரில் தடுத்துவைக்கப்பட்டுள்ள 65 மலேசியரில் 39 பேர் போலீசைத் தொடர்புகொண்டு நாடு திரும்ப விரும்புவதாகக் கூறியுள்ளனர்.
அவர்களில் பத்து ஆடவர்கள் வயது வந்தவர்கள், 12பேர் சிறுவர்கள், அறுவர் பெண்கள் என்று புக்கிட் அமான் பயங்கரவாத- எதிர்ப்புப் பிரிவு தலைமை உதவி இயக்குனர் ஆயோப் கான் மைடின் பிச்சை கூறினார்.
“எங்களைத் தொடர்புகொண்ட அவர்கள் மலேசியா திரும்பிவர விரும்புவதாகக் குறிப்பிட்டனர். இது பல தரப்புகள் சம்பந்தப்பட்ட ஒரு விவகாரம். முதலில் பல இடங்களில் உள்ள அவர்களை ஒரு இடத்தில் கொண்டு வந்து சேர்க்க வேண்டும்”, என்றாரவர்.
“நாடு திரும்ப விருப்பம் தெரிவித்தவர் எண்ணிக்கை குறைவுதான். நாளாக, நாளாக இந்த எண்ணிக்கை அதிகரிக்கக் கூடும்”, என்றாரவர்.