கோலாலம்பூர், பிரிக்ஃபீல்ட்சில், ஒரு சாலையின் பெயர் மாற்ற பரிந்துரையில், துன் சம்பந்தன் சாலையை உட்படுத்த வேண்டாம் என மஇகா துணைத் தலைவர் எம் சரவணன், பிரதமர் துரை அமைச்சர் டாக்டர் முஜாஹிட் யூசோஃப்-ஐக் கேட்டுக்கொண்டார்.
பல மதங்களின் வழிப்பாட்டுத் தளங்கள் அமைந்திருக்கும் இடத்திற்கு ‘ஜாலான் ஹர்மோனி’ (நல்லிணக்கச் சாலை) எனப் பெயர் மாற்றம் செய்ய வேண்டுமெனும் முஜாஹிட்டின் பரிந்துரைக்கு, சரவணன் இவ்வாறு கருத்துரைத்தார்.
கட்சியின் 5-வது தேசியத் தலைவரும் சுதந்திரப் போராட்டவாதியுமான விதி சம்பந்தனின் பெயரை அச்சாலைக்கு வைக்க, மஇகா பல முயற்சிகளை எடுத்துள்ளதாக சரவணன் தெரிவித்தார்.
“எனவே, பெயர் மாற்றம் செய்ய விரும்பும் அமைச்சர், துன் சம்பந்தன் சாலையை உட்படுத்த வேண்டாம்.
முன்னதாக, ஜாலான் பிரிக்ஃபீல்ட்ஸ் என்றிருந்த அச்சாலை, 1982-ல் ஜாலான் துன் சம்பந்தன் என்று மாற்றப்பட்டது.
பல்லின நல்லிணக்கத்திற்கு அடையாளமாக, பிரிக்ஃபீல்ட்ஸ்சில் ஒரு சாலைக்கு ‘ஜாலான் ஹர்மோனி’ என்று பெயரிட முஜாஹிட் பரிந்துரைத்துள்ளதாக ஃபிரி மலேசியா டுடே செய்தி வெளியிட்டது.
“பினாங்கு மாநிலத்தில், சுமார் 1 கிமீ தூரத்திற்கு, இதேப் போன்று தேவாலயம், கோயில் மற்றும் மசூதி அமைந்துள்ளது. அங்கு ஒரு சாலைக்கு இப்பெயரை இடலாம்,” என்று அவர் கூறியுள்ளார்.