பக்காத்தான் வெளிநடப்புச் செய்தது சரியா?

உங்கள் கருத்து: “ஒரு தரப்பினர், இறுதிவரை இருந்து எதிர்த்துப் போராடி இருக்க வேண்டும் என்று நினைக்கிறார்கள், இன்னொரு தரப்பினர் வெளிநடப்புத்தான் சரி, அதன்வழி பேரணி மசோதாவுக்கு ஒரு அங்கீகாரம் கொடுக்காமல் மறுக்கப்பட்டிருகிறது என்று நினைக்கிறார்கள்.”

 

 

பக்காத்தான் ஏமாற்றி விட்டது என்கிறார்கள் சமூக ஆர்வலர்கள்

சூசாகேஸ்: இங்கு முக்கியமாக விடை தெரிய வேண்டிய கேள்வி இதுதான்: பக்காத்தான் அதன் வாக்காளர்கள் விரும்பியதைத்தான் செய்ததா அல்லது அதன் எம்பிகள் தங்கள் விருப்பப்படிதான் அப்படிச் செய்தார்களா?

வெளிநடப்பு- அதைத்தான் உங்கள் தொகுதி வாக்காளர்கள் விரும்பினார்களா? அப்படி ஒரு திட்டம் உங்களுக்கு இருந்தால் அதை உங்கள் வாக்காளர்களுக்குத் தெரியப்படுத்த வேண்டும் என்று கொஞ்சமாவது நினைத்துப் பார்த்தீர்களா?

அம்னோவின் கட்டுப்பாட்டில் உள்ள நாடாளுமன்றத்தில் பக்காத்தான் விரும்புவது எதுவும் நடக்காது என்பது தெரிந்த விசயம்தான்.

எனவே, பக்காத்தான் அதன் எண்ணத்தை வலைப்பதிவுகள் மூலமாக அல்லது செய்தியாளர் கூட்டம் நடத்தி முன்கூட்டியே தெரியப்படுத்தி இருக்கலாம்.

வாக்காளர்கள் அம்னோவின்மீது கொண்டுள்ள வெறுப்பு தனக்கு ஆதரவாக மாறும் என்று பக்காத்தான் அனுமானம் செய்துகொள்ளக்கூடாது. நம் இருவருக்கும் அம்னோ பொதுவான எதிரி. ஆனால், அந்த ஒரு காரணம் மட்டுமே யாருக்கு என் வாக்கு என்பதைத் தீர்மானித்து விடாது.

பக்காத்தான் காதைத் தீட்டி வைத்துக்கொள்ள வேண்டும். ஆத்திரம் கொண்ட நடுத்தர வர்க்கம் ஒன்று உள்ளது. அதைப் புறக்கணிப்பது நல்லதல்ல.

வெறுப்புற்றவன்: மெலிஸா லூவி, உங்கள் ஏமாற்றமும் ஆதங்கமும் புரிகிறது.உங்கள் நிலையில்தான் நானும். ஆனால், பக்காத்தானால் என்ன செய்ய முடியும்? சட்டங்களை நிறைவேற்றத் தேவையான பெரும்பான்மை பலம் பிஎன்னுக்கு இருக்கிறது. அரசமைப்பில் திருத்தங்கள் செய்வதாக இருந்தால்தான் அது போதாது.

அந்த அடக்குமுறை சட்டத்தை எப்படியும் நிறைவேற்றுவது என்ற வைராக்கியத்துடன் அவர்கள் இருந்தனர். மக்களின் விருப்பத்தைப் பற்றிக் கொஞ்சமும் கவலைப்படவில்லை.

எனவே, நீங்கள் உங்கள்  தலைமுறையைச் சேர்ந்த இளைஞர்களை வாக்காளர்களாக பதிவுசெய்ய வேண்டும். அந்த முயற்சியில் உங்கள் ஆற்றலையும் நேரத்தையும் செலவிடுங்கள். இனியும் அவர்களிடம் யார் ஆண்டால் என்ன என்ற அக்கறையின்மை இருக்கக்கூடாது. அதனால் உங்கள் தலைமுறையின் எதிர்காலம்தான் பாதிப்புறும்.

கொம்பஸ்: பக்காத்தான் எம்பிகள் மக்களையில் இருந்து வாக்களிப்பில் கலந்துகொண்டிருந்தால் தோற்று போயிருப்பார்கள் (அது நிச்சயம்). அதன்பின் அம்மசோதா அங்கீகரிக்கப்பட்ட சட்டமாகி இருக்கும். 

அவசரம் அவசரமாகக் கொண்டுவரப்பட்டு அதிகாரப்பலத்துடன் சட்டமாக்கப்பட்ட ஒரு மசோதாவுக்கு அந்த அங்கீகாரத்தைக் கொடுக்ககூடாது. அந்த நோக்கத்தில்தான் பக்காத்தான் தலைவர்கள் அதன் மீதான வாக்களிப்பில் கலந்துகொள்ளவில்லை என்று நான் நினைக்கிறேன். 

கேஜென்: மெலிஸா  அரசியல்வாதி அல்ல. அதனால்தான் உள்ளே இருந்து வாக்களிப்பதைவிட வெளிநடப்புச் செய்வது அதிக தாக்கத்தை உண்டுபண்ணக்கூடியது என்பதை அவரால் உணர முடியவில்லை.

பலநாட்டு செய்தி நிறுவனங்கள் இந்த வெளிநடப்பை முக்கிய செய்தியாக்கி வெளியிட்டிருக்கின்றன. கூடவே, அந்த ஜனநாயகத்துக்கு எதிரான மசோதாவின் தீமைகளையும் கவனப்படுத்தியுள்ளன.

பல்லினவாதி: பிஎன் எம்பிகள்தாம் மலேசியர்களுக்குத் துரோகம் இழைத்தவர்கள். அந்த மசோதா கொண்டுவரப்படுவதை நாம் விரும்பவில்லை. ஆனால், பிஎன் எம்பிகள் மலேசியர்களின் விருப்பத்தை புறம்தள்ளி அதைச் சட்டமாக்கியுள்ளனர்.

பக்காத்தான் மக்கள் பக்கம்தான் நின்றது. என்ன, அதற்கு பெரும்பான்மை இல்லாமல் போயிவிட்டது. அது, எங்கள் தப்புத்தான். அடுத்த பொதுத் தேர்தலில் அதைச் சரிசெய்துவிடுகிறோம்.

TAGS: