மலேசிய இந்திய வர்த்தகச் சங்கங்களின் சம்மேளனம் (மைக்கி) , வெளிநாட்டுத் தொழிலாளர்கள் போதுமான எண்ணிக்கையில் இல்லாதது இந்தியர் தொழில்களைப் பாதிப்பதால் பிரதமர் டாக்டர் மகாதிர் முகம்மட் தலையிட்டு இதற்குத் தீர்வு காண வேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ளது.
இந்தியர்கள் தொழில்களான துணி வியாபாரம், நகைக்கடைகள், முடி திருத்தகங்கள், பழைய இரும்புக் கடைகள், மளிகைக் க்டைகள், செய்தித் தாள் விநியோகம், உணவகங்கள் போன்றவற்றுக்கு 50,000 வெளிநாட்டுத் தொழிலாளர்கள் உடனடியாக தேவை என்று மைக்கி தலைவர் என்.கோபாலகிருஷ்ணன் கூறினார்.