முன்னாள் பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் வழக்கில் ஒரு சாட்சி தம்முடைய கணக்குக்குப் பணம் மாற்றிவிட்டிருப்பதைக் கேள்விப்பட்ட நஜிப் அதிர்ச்சியும் ஆத்திரமும் அடைந்தார் என்று சொன்னதை வைத்து வழக்குரைஞரான ஷியாரெட்சான் ஜொஹான் கிண்டலடித்துள்ளார்.
“அதிர்ச்சியும் ஆத்திரமும் கொண்டு சட்டத்துறைத் தலைவரை மாற்றினார், துணைப் பிரதமரை மாற்றினார். எம்ஏசிசி-யை மிரட்டினார். என்ன அதிர்ச்சி, என்ன ஆத்திரம்”, என்றவர் டிவிட் செய்திருந்தார்.
நஜிப் அதிர்ச்சி அடைந்த போதும் போலீசில் புகார் செய்யுமாறு கூறவில்லையே, ஐயா என்றவர் குறிப்பிட்டிருந்தார்.ஷியாரெட்சான் டிஏபி மூத்த தலைவர் லிம் கிட் சியாங்கின் உதவியாளர்களில் ஒருவர்.
முன்னதாக, கோலாலும்பூர் உயர் நீதிமன்றத்தில் சாட்சியமளித்த ஈசான் பெர்டானா நிர்வாக இயக்குனர் ஷம்சுல் அன்வார் சுலைமான், போலீஸ் அல்லது எம்ஏசிசி-யிடம் புகார் செய்யுமாறு நஜிப் தனக்கு உத்தரவிடவில்லை என்று கூறியிருந்தார்.