மலாய்க்காரர்கள் பிளவு பட்டிருப்பதை எண்ணி சிலாங்கூர் சுல்தான் ஆழ்ந்த கவலை

மலாய்க்காரர்கள் பிளவுபட்டிருப்பதை எண்ணிக் கவலையுறும் சிலாங்கூர் சுல்தான் சுல்தான் ஷாராபுடின் இட்ரிஸ் ஷா, மலாய் ஒற்றுமையின்மை மோசமான நிலைக்குச் சென்று விட்டதாக வருத்தத்துடன் குறிப்பிட்டார்.

மலாய்க்காரர்கள் பிரிந்து கிடப்பது, அதுவும் பல குழுக்கள் மலாய்க்காரர் நலன் காக்கப் போராடுவதாகக் கூறிக்கொண்டு பிரிந்து கிடப்பது நல்லதல்ல என்று சுல்தான் குறிப்பிட்டார்.

அடிக்கடி இக்குழுவினர் ஒருவர் மற்றவரைக் குறை சொல்வது நிலைமையை மேலும் மோசமடையச் செய்துள்ளது. அது, ஒருவர் தன் முகத்தில் தானே கரி பூசிக் கொள்வதற்கு ஒப்பாகும் என்றாரவர்.

“மலாய்க்காரர்கள் வெளிப்படையாக வாதமிட்டுக் கொள்வதையும் சர்ச்சைகளில் ஈடுபடுவதையும் எல்லா இடங்களிலும் பார்க்கிறோம்.

“ஒருவர் மற்றவரைப் பழித்துரைப்பது, பொறாமை கொள்வது, காட்டிக்கொடுப்பது, வெறுப்பை வெளிப்படுத்துவது ஆகியவை மலாய்க்காரரிடையே ஒரு கலாச்சாரமாக உருவாகி வருவதுபோல் தோன்றுகிறது”, என சுல்தான் நேற்றிரவு ஷா ஆலாமில் நோன்பு துறக்கும் நிகழ்வு ஒன்றில் கூறினார்.