அம்னோ-பாஸ் ஒத்துழைப்பு இனவாதத்தைத் தூண்டுவதற்காக அல்ல – நிக் அப்டு

அம்னோவுக்கும் பாஸுக்குமிடையிலான ஒத்துழைப்பு நாட்டில் இனவாதத்தைத் தூண்டிவிடும் நோக்கத்தைக் கொண்டதல்ல என்று பாஸ் மத்திய செயலவைக் குழு உறுப்பினர் நிக் அப்டு நிக் அப்துல் அசீஸ் கூறினார்.

“இஸ்லாம் இனவாதத்தையும் ஒரு குழு மற்றொன்றைவிட மேலானது என்று உயர்த்திச் சொல்வதையும் நிராகரிக்கிறது.

“அம்னோ-பாஸ் ஒத்துழைப்பு ஓர் அருட்கொடையாகும். இனவாதத்தைத் தூண்டிவிடும் நோக்கம் அதற்கு இல்லை.

“உண்மை தெரியாமல் அந்த மேன்மையான ஒத்துழைப்பைக் கொச்சைப்படுத்தி விடாதீர்கள்”, என்றவர் வலியுறுத்தினார்.

அடுத்த பொதுத் தேர்தலில் கூட்டுச் சேர்ந்து பக்கத்தான் ஹரப்பானை எதிர்க்க பாஸும் அம்னோவும் இணக்கம் கண்டுள்ளன.

முவாபக்காட் பெர்பாடுவான் உம்மா என்றழைக்கப்படும் அக்கூட்டணியின் சாசனம் ஹரி ராயாவுக்குப் பின்னர் அறிவிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.