1எம்டிபி ஊழலுடன் தொடர்புள்ள லோ தேக் ஜோவுக்கு நெருக்கமான நண்பர் ஒருவர், அதிகாரிகள் பினாங்கு தஞ்சோங் பூங்காவில் உள்ள ஜோ லோ குடும்பத்தாரின் பங்களா வீட்டைக் கைப்பற்றியதைக் குறை கூறினார்.
Citizens Awareness Chant Group எனப்படும் என்ஜிஓ-வை வைத்துள்ள யான் லீ, 1எம்டிபி விவகாரத்துக்கும் அந்த பங்களாவுக்கும் எந்தத் தொடர்புமில்லை என்று ஓர் அறிக்கையில் கூறினார்.
ஜோ லோவின் பெற்றோர்களான லேர்ரி லோ-வையும் கோ கைக் ஈ-வையும் இருபதாண்டுகளுக்கு மேலாக தனக்குத் தெரியும் என்று யான் கூறினார்.
பங்களா பல ஆண்டுகளுக்குமுன், 1எம்டிபி ஊழல் நிகழ்வதற்கு முன்பே கட்டப்பட்டது என்பதால் அதை அந்த ஊழல் விவகாரத்துடன் தொடர்புப்படுத்துவது சரியல்ல என்றாரவர்.
“ கையாடல் செய்யப்பட்ட நிதி என்று நீதிமன்றத்தில் நிரூபிக்கப்பட்டிருந்தால் அதைக் கைப்பற்றுவது சரியே.
“ஆனால், இந்த வீடு 1எம்டிபி நிறுவப்படுவதற்குப் பல ஆண்டுகளுக்கு முன்பே கட்டப்பட்டதாயிற்றே இதை 1எம்டிபி-யுடன் தொடர்புப்படுத்துவது எப்படி நியாயமாகும்?”, என்றவர் வினவினார்.
“ஒரு குடும்பத்தின் வீட்டை- அது யாருடைய வீடாக இருந்தாலும் சரி- நியாயமான காரணமின்றி பிடுங்கிக் கொள்வது சரியல்ல”, என்றவர் சொன்னார்.