லோரோங் டிஏஆர்-இல் சட்டவிரோதமாக செயல்பட்ட 400 ஸ்டால் கடைகள் அகற்றப்பட்டன

கோலாலும்பூர் மாநகராண்மைக் கழகம் (டிபிகேஎல்), லோரோங் துவாங்கு அப்துல் ரஹ்மானில் சட்டவிரோதமாக செயல்பட்டுக் கொண்டிருந்த ரமலான் பஜாரில் இருந்த 400 ஸ்டால்களையும் அகற்றியுள்ளது.

ஞாயிற்றுக்கிழமை காலைக்குள் அக்கடைகள் எடுக்கப்பட வேண்டும் என்று அறிவிக்கை விடுத்த பின்னரும் அவை அங்கேயே இருந்ததாக டிபிகேஎல் இன்று ஓர் அறிக்கையில் கூறியது.

அதன் பின்னர் நேற்று பிற்பகல் 3.30க்கு அமலாக்க அதிகாரிகள் அங்கு வந்து கடைகளை அகற்றுமாறு உத்தரவிட்டனர்.

“லோரோங் துவாங்கு அப்துல் ரஹ்மானில் ரமலான் சந்தைக்கு அனுமதி இல்லை”, என டிபிகேஎல் கூறியது.

டிபிகேஎல் உத்தரவுக்கு எதிர்ப்புக் காட்டாமல் கடைக்காரர்கள் பொருள்களை எடுத்துக்கொண்டு வெளியேறினர். .

ஆண்டுதோறும் ரமலான் சந்தை அங்கு நடப்பதுதான் வழக்கம். ஆனால், ஜாலான் துவாங்கு அப்துல் ரஹ்மானிலும் ஜாலான் மஸ்ஜிட் இந்தியாவிலும் உள்ள கடைக்காரர்கள் முறையிட்டதால் ரமலான் சந்தை இப்போது ஜாலான் ராஜாவுக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளது.