பக்காத்தான் ஹராப்பான் (பிஎச்) கூட்டணி கட்சியின் முன்னாள் உறுப்பினர் லத்திபா கோயா, மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்தின் (எம்ஏசிசி) தலைமை ஆணையராக நியமிக்கப்பட்டது, பிகேஆர் தலைவர் அன்வார் இப்ராஹிமிற்குச் சிக்கலாக அமையலாம் என மசீச தேசியத் தலைவர் வீ கா சியோங் கவலை தெரிவித்துள்ளார்.
“பொதுவாகவே, லத்திப்பா கோயா அன்வாரை இலக்கு வைத்திருப்பார், அதுதான் எனக்கு கவலை அளிக்கிறது.
“அன்வார் அடுத்தப் பிரதமராக வருவதை நிறுத்துவதற்கு, பிரதான சதித்திட்டத்தின் ஒரு பகுதியாக அவருடைய (லத்திப்பா) நியமனம் இருக்கக்கூடாது என்று நான் நம்புகிறேன்.
“அந்தப் பணிக்கு அவர் சரியான தேர்வா, என்று கேள்வி கேட்பது நியாயமான ஒன்றே,” என்று அவர் இன்று ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
லத்திபாவின் நியமனம் பல கேள்விகளை எழுப்பியுள்ளது, முக்கிய நிறுவனங்களுக்கு அரசியல்வாதிகளை நியமனம் செய்யக் கூடாது எனும் பிஎச் வாக்குறுதிக்கு எதிராக உள்ளது.
“அரசியலில் ஈடுபாட்டுடன் இருப்பவர்கள், எம்ஏசிசி மற்றும் பிற தொடர்புடைய பாதுகாப்பு நிறுவனங்களுக்குத் தலைமயேற்கக் கூடாது எனும் நிலைபாட்டில் மசீச தெளிவாக உள்ளது.
“லத்தீப்பா தனது பிகேஆர் உறுப்பியத்தை விட்டுவிட்டதா அறிவித்தாலும், எம்ஏசிசி-யின் சுதந்திரம் என்பது கேள்விக்குறியாகவே உள்ளது.