அம்னோ உதவித் தலைவரும் பெரா எம்பியுமான இஸ்மாயில் சப்ரி யாக்கூப், ஹரி ராயா கொண்டாட்டங்களுக்குப் பின்னர் முக்கிய பதவி நியமனங்கள் மீதான நாடாளுமன்றச் சிறப்புத் தேர்வுக் குழுவிலிருந்து விலகப் போவதாகக் கூறினார்.
லத்திபா கோயாவை எம்ஏசிசி தலைவராக நியமிப்பதற்குமுன் அக்குழுவுடன் ஆலோசனை கலக்காதது புத்ரா ஜெயா அக்குழுவை வெறும் ரப்பர் முத்திரையாகத்தான் கருதுகிறது என்பதைக் காட்டுவதாக இஸ்மாயில் ஓரியெண்டல் டெய்லியிடம் கூறினார்.
“இது முதல் தடவை அல்ல. தேசிய போலீஸ் படைத் தலைவர், தலைமை நீதிபதி ஆகியோரை நியமனம் செய்தபோதுகூட குழுவுடன் விவாதிக்கவில்லை”, என நாடாளுமன்ற எதிர்க்கட்சித் தலைவர் கூறினார்.