டிஏபி மூத்த தலைவர் லிம் கிட் சியாங் எந்த ஒரு “சூறா”வையும் நீதியின் கரங்களில் சிக்காமல் தப்பிவிடக் கூடாது என்று வலியுறுத்தினார்.
“இப்போது எம்ஏசிசி கைநிறைய வேலை இருப்பதால் முன்னாள் அரசாங்கத் தலைவர்கள் சிலரின்மீது அதனால் நடவடிக்கை எடுக்க முடியாமல் இருக்கலாம் ஆனால், அவர்கள் நீதிமன்றத்தில் நிறுத்தப்படுவதிலிருந்து தப்பித்துக்கொள்ள இடமளித்து விடக் கூடாது”, என்று லிம் ஓர் அறிக்கையில் கூறினார்.
லிம், பிரதமர் டாக்டர் மகாதிர் முகம்மட் முன்னாள் அரசாங்கத்தில் தவறிழைத்ததாகக் கூறப்படும் எல்லாத் தலைவர்களையும் வளைத்துப் பிடிக்க அரசாங்கத்திடம் போதுமான ஆள்பலம் இல்லை என்று கூறியிருப்பது குறித்துக் கருத்துரைத்தார்.
இந்தச் “சுறாக்களை”ப் பிடித்து நீதிமுன் நிறுத்துவதே புதிதாக நியமிக்கப்பட்டிருக்கும் எம்ஏசிசி தலைவரான லத்திபா கோயா அடுத்த ஈராண்டுகளுக்கு எதிர்நோக்கும் மிகப் பெரிய சவாலாக இருக்கும் என்று டிஏபி பெருந் தலைவர் கூறினார்.