செக்ஸ் காணொளி ஒன்று சமூக ஊடகங்களில் வைரலாகி வருவதை “அசிங்க” அரசியல் என்று குறிப்பிட்ட ரெம்பாவ் எம்பி ஜமாலுடின், அக்காணொளியைப் புறக்கணிக்குமாறு மலேசியர்களைக் கேட்டுக்கொண்டார். அக்காணொளி அமைச்சர் போல் தோற்றமளிக்கும் ஒருவர் இன்னொரு ஆடவருடன் ஒரே படுக்கையில் இருப்பதைக் அக்காணொளி காண்பிக்கிறது.
“அரசியல் ஒரு கடுமையான தொழில். சில வேளைகளில் அரசியல் அசிங்கமாகி விடுகிறது. இன்னும் சில நாள்களில் அழுக்குமிக்கதாக, அருவருக்கத்தக்கதாக மாறி விடுகிறது. இன்று அது நாறிக் கிடக்கிறது”, என்றாரவர்.
ஏற்கனவே, கடந்தகால ஊழல்களால் நாடு அதிர்ச்சியடைந்துள்ள நிலையில் இன்னொரு மனிதரின் பெயரைக் கெடுக்கும் நோக்கம் ஒன்றை மட்டுமே கொண்ட இப்படிப்பட்ட வெறுக்கத்தக்க செயல்கள் தேவைதானா என்றவர் வினவினார்.
“அரசியல் தொடர்பில் ஒழுக்கக்கேடான செய்திகளைக் கேள்விப்பட்டால் முகத்தை வேறு பக்கமாக திருப்பிக் கொள்ளுங்கள். ஒரு காசு பெறாத அசிங்கத்துக்கு முக்கியத்துவம் கொடுக்கும்போதுதான் அது துளிர்விட்டுத் தழைக்கிறது”, என கைரி அவரது இன்ஸ்டாகிராமில் பதிவிட்டிருந்தார்.