துணை அமைச்சரிடம் போலீஸ் ஐந்து மணி நேரம் விசாரணை

மூலத் தொழில் துணை அமைச்சர் ஷம்சுல் இஸ்கண்டார் முகம்மட் அகின், தன் தனிச் செயலரின் பாலியல் காணொளி விவகாரம் தொடர்பில் போலீஸ் 5 தன்னிடம் விசாரணை நடத்தியதை உறுதிப்படுத்தினார்.

நேற்றிரவு 7 மணிக்கு மலாக்கா போலீஸ் தலைமையகம் சென்றதாகவும் விசாரணை 5 மணி நேரம் நீடித்ததாகவும் ஷம்சுல் தெரிவித்தார்.

“போலீசுக்குத் தேவையான விவரங்களைக் கொடுத்தேன்.

“இந்த விவகாரம் விரைவில் முடிவுக்கு வர வேண்டும். அப்போதுதான் மற்ற முக்கிய விவகாரங்களில் கவனம் செலுத்த முடியும்”, என்று பிகேஆர் தகவல் தலைவருமான ஷம்சுல் கூறினார்.