130 அந்நியர்கள் பிடிபட்டனர்

நேற்றிரவு குடிநுழைவுத் துறை காஜாங்கிலும் பூச்சோங்கிலும் மேற்கொண்ட ஓர் அதிரடி நடவடிக்கையில் பல்வேறு குற்றங்களுக்காக 130 அந்நியர்கள் கைதானார்கள்.

காஜாங் கொண்டோமினிய வீடுகளில் மேற்கொள்ளப்பட்ட சோதனையில் கைதானவர்களில் 78 பேர் நைஜிரியர்கள், அறுவர் பிலிப்பினோக்கள், ஒருவர் இந்தியர், ஒருவர் பாகிஸ்தானியர் , ஒரு வயதுக்கும் மூன்று வயதுக்குக்குமிடைப்பட்ட குழந்தைகள் நான்கு எனக் குடிநுழைவுத் துறை தலைமை இயக்குனர் கைருல் ட்ஸைமீ டாவுட் கூறினார்.

பூச்சோங் குடியிருப்புப் பகுதிகளில் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கையில் மேலும் 40 வெளிநாட்டவர் கைதானார்கள்.

“அவர்கள் முறையான ஆவணங்களை வைத்திராதது, அனுமதிக்கப்பட்ட காலத்தைமீறி தங்கியிருத்தல், அனுமதியைத் தவறாகப் பயன்படுத்தியது, மாணவர் மற்றும் சுற்றுப்பயணிகளுக்கான அனுமதிகள் காலாவதியான பின்னரும் நாட்டில் தங்கி இருந்தது, வியாபாரம் செய்தல் போன்ற குற்றங்களுக்காகக் கைது செய்யப்பட்டனர்.

“சிலர் இணையவழி மோசடிகள் செய்து வந்திருப்பதாகவும் சந்தேகப்படுகிறோம்”, என்றாரவர்