அஸ்மின் குடும்பத்தாரை எண்ணி வருத்தம் கொள்கிறார் வான் அசிசா

துணைப் பிரதமர் டாக்டர் வான் அசிசா வான் இஸ்மாயில், ஆபாச காணொளி ஒன்றுடன் தொடர்புப்படுத்திப் பேசப்படும் பொருளாதார விவகார அமைச்சர் அஸ்மின் அலியின் குடும்பத்தாரை நினைக்கையில் வருத்தமாக உள்ளது என்றார்.

“இந்தச் ‘சாக்கடை அரசியல்’ எனக்குப் பிடிக்காத ஒன்று. நானும் அதனால் பாதிக்கப்பட்டிருக்கிறேன். அஸ்மின் குடும்பத்தாருக்கு என் அனுதாபங்கள்”, என்றாரவர். வான் அசிசா, சாந்துபோங் பிகேஆர் இளைஞர் தலைவர் ஹசிக் அப்துல்லா அப்துல் அசிஸ் அந்த ஆபாச காணொளி தொடர்பில் வெளியிட்டிருக்கும் சுய வாக்குமூலம்மீது கருத்துரைத்தபோது அவ்வாறு கூறினார்.

ஹசிக் அக்காணொளியில் உள்ளது தானே என்பதை ஒப்புக்கொண்டு அதில் உள்ள இன்னொரு ஆடவர் அமைச்சர் அஸ்மின் அலி என்றும் குறிப்பிட்டிருக்கிறார். ஆனால், அஸ்மின் அதை மறுக்கிறார்.

எல்லாத் தரப்பினரும் நாட்டை மேம்படுத்துவதில் கவனம் செலுத்த வேண்டும் என்பதால் அசிங்கத்தனமான அரசியலுக்குக் கட்சியில் இடமில்லை என்று வான் அசிசா வலியுறுத்தினார்.