ரொசாலி முகம்மட் செபராங் பிறை மேயராகிறார்

செபராங் பிறை முனிசிபல் மன்றம்(எம்பிஎஸ்பி) மாநகராட்சி மன்றமாக(எம்பிஎஸ்பி) தரம் உயர்த்தப்பட்டதும் முனிசிபல் மன்றத் தலைவர் ரொசாலி முகம்மட் மேயராகப் பொறுப்பேற்பார்.

ரொசாலியை மேயராக நியமிக்க கடந்த புதன்கிழமை நடந்த மாநில ஆட்சிக்குழு(எக்ஸ்கோ)க் கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டதாக பினாங்கு எக்ஸ்கோ ஜக்தீப் சிங் தியோ கூறினார்.

என்றாலும், பேரரசர் சுல்தான் அப்துல்லா சுல்தான் அஹமட் ஷாவின் ஒப்புதல் பெற்ற பின்னரே ரொசாலி மேயராக அதிகாரப்பூர்வமாக பிரகடனம் செய்யப்படுவார் என்றவர் குறிப்பிட்டார்.

மேயர் பினாங்கு ஆளுநர் அப்துல் ரஹ்மான் அப்பாஸ் முன்னிலையில் பதவி உறுதிமொழி எடுத்துக்கொள்வார். பதவிப் பிரமாணம் எப்போது என்பது பின்னர் அறிவிக்கப்படும்.