மூன்று வயது குழந்தை இறந்தது: ஓராங் அஸ்லி இறப்பு எண்ணிக்கை 15ஆக உயர்ந்தது

கோத்தா பாரு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த மூன்று வயது ஓராங் அஸ்லி குழந்தை நேற்று மாலை இறந்தது.

“மருத்துவ மனை சவப் பரிசோதனை செய்து இறப்புக்கான காரணத்தைக் கண்டறிய முயலும்”, என பிரதமர்துறை அமைச்சர் பொன்.வேதமூர்த்தி இன்று ஓர் அறிக்கையில் தெரிவித்தார்.

“இதனுடன் சேர்ந்து கோலா கோ-வில் இறந்த ஓராங் அஸ்லிகளின் எண்ணிக்கை 15 ஆகியுள்ளது”, என்றாரவர்.

ஓராங் அஸ்லி மேம்பாட்டுத் துறை நஸ்ரி ரோஸ்லி என்ற அக்குழந்தையின் குடும்பத்துக்குத் தேவையான உதவிகளைச் செய்யும் என்றும் வேதமூர்த்தி கூறினார்.

அமைச்சர் நஸ்ரி குடும்பத்தாருக்கு இரங்கல் தெரிவித்தார்.

கடந்த ஒரு மாத காலத்தில் கம்போங் கோ-வில் ஓராங் அஸ்லிகளில் பதெக் இனத்தைச் சேர்ந்தவர்கள் 15 பேர் மர்மமான சூழலில் இறந்துள்ளனர்.

அவர்களின் இறப்புக்கான காரணம் இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை. ஆனால், இறப்பதற்குமுன் அவர்களுக்கு மூச்சுத்திணரல் ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது.

கம்போங் கோலா கோ இப்போது கட்டுப்படுத்தப்பட்ட பகுதியாக மாற்றப்பட்டுள்ளது. அதனுள் செல்லவோ அங்கிருந்து யாரும் வெளிவரவோ முடியாது.