உணவு நச்சுத்தன்மையால் 110 மாணவர்கள் பாதிப்பு

சிலாங்கூர், காஜாங், பண்டார் ஸ்ரீ புத்ராவில் உள்ள ஒரு பல்கலைக்கழகக் கல்லூரியைச் சேர்ந்த 110 மாணவர்களுக்கு வயிற்று வலி, வயிற்றுப்போக்கு, வாந்தி ஆகியவற்றுக்காக செர்டாங் மருத்துவ மனையில் சிகிச்சை அளிக்கப்பட்டது. அவர்கள் உணவு நச்சுத்தன்மையால் பாதிக்கப்பட்டிருக்கலாம் என்று ஐயுறப்படுகிறது.

110 மாணவர்களில் 90 பேர் பெண்கள், 20 பேர் ஆண்கள்.

“நேற்று மக்ரிப் தொழுகைக்குப் பின்னர் வயிறு வலிப்பதாகவும் வாந்தி வருவதாகவும் அவர்கள் முறையிட்டனர். கல்லூரி நிர்வாகம் அவர்களை இரவு மணி 8.30க்கு செர்டாங் மருத்துவ மனைக்கு அழைத்துச் சென்றது”, எனக் கல்லூரி அதிகாரி ஒருவர் பெர்னாமாவிடம் தெரிவித்தார்.

பாதிக்கப்பாட்ட மாணவர்கள் உடல் நலம் தேறி வருவதாகவும் அவர் தெரிவித்தார்.