அம்னோ உச்சமன்றம் நவம்பரில் அவசரக் கூட்டம் நடத்தி கட்சி அமைப்பு விதிகள் சிலவற்றுக்குத் திருத்தம் கொண்டுவர எண்ணுகிறது.
“காலத்தின் தேவைக்கேற்ப கட்சியை ஒழுங்குபடுத்துவதே அதன் நோக்கம்”, எனத் தலைமைச் செயலாளர் அன்னுவார் மூசா கூறினார்.
திருத்தங்களைக் கொண்டுவருமுன்னர், உதவித் தலைவர் ஒருவரின் தலைமையில் ஒரு குழு அமைக்கப்பட்டு அது அடிநிலை உறுப்பினர்க: மற்றும் கட்சியின் வெவ்வேறு பிரிவுகளின் கருத்துகளைப் பெறும்.
“அக்கருத்துகள் உச்ச மன்றத்துக்குக் கொண்டு செல்லப்பட்டு அங்கு விவாதித்து முடிவெடுக்கப்படும். இப்போதைக்கு அமைப்புவிதித் திருத்தம் தொடர்பாக உச்ச மன்றம் எந்த முடிவையும் செய்யவில்லை”, என்றவர் ஓர் அறிக்கையில் தெரிவித்தார்.
உச்ச மன்றம் அதன் பரிந்துரைகளை அடிநிலை உறுப்பினர்களின் கவனத்துக்குக் கொண்டு சென்று அவர்களின் கருத்துகளைப் பெற்ற பின்னரே அவசரக் கூட்டத்தில் அவற்றைத் தாக்கல் செய்யும் என்றும் அவர் சொன்னார்.