தடுப்பு முகாம்களில் உள்ள குடியேறிகளுக்கு உணவளிக்க ஒவ்வொரு மாதமும் ரிம3.5 மில்லியன் – அதாவது ஒரு ஆளுக்கு ஒரு நாளைக்கு ரிம12- செலவாகிறது எனக் குடிநுழைவுத்துறை தலைமை இயக்குனர் கைருல் ட்ஸைமி டாவுட் கூறினார்.
நாடு முழுக்கக் குடிநுழைவுத் துறைக்குச் சொந்தமாக 14 முகாம்கள் உள்ளன. சட்டவிரோத குடியேறிகள் அங்கு தடுத்து வைக்கப்படுகிறார்கள். அவர்களை அவர்களின் நாட்டுக்குத் திருப்பி அனுப்புவதற்குத் தேவையான ஆவணங்களை அவர்களின் தூதரகங்கள் தயார்படுத்தும்வரை- பெரும்பாலும் இரண்டு மாதங்கள்- அவர்கள் அங்கு தடுத்து வைக்கப்படுகிறார்கள்.
“தேவையான பயண ஆவணங்களை விரைவாக தயாரிக்க முடிந்தால் செலவைக் குறைக்கலாம்”, என்று கைருல் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.