கிட் சியாங்: பிஎஸ்சி அறிக்கையைத் திருத்தி எழுத வேண்டும்

இன்று நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட தேர்தல் சீரமைப்புமீதான நாடாளுமன்ற  சிறப்புக்  குழுவின் இடைக்கால அறிக்கையில் இடம்பெற்றுள்ள பரிந்துரைகளை எல்லாத் தரப்பினரும்  பின்பற்றுவதைக் கட்டாயமாக்க வேண்டும் என்றும் அதற்கு ஏதுவாக அந்த அறிக்கையைத் திருத்தி எழுத வேண்டும் என்றும் டிஏபி நாடாளுமன்றத் தலைவர் லிம் கிட் சியாங் கூறியுள்ளார்.

“இல்லையேல், அரசாங்கமும் மற்ற அமைப்புகளும் அந்தப் பரிந்துரைகளை அமல்படுத்த வேண்டிய கட்டாயம் இல்லாது போய்விடும்”, என்று அந்த அறிக்கை மீதான விவாதத்தின்போது லிம் குறிப்பிட்டார்.

அரசாங்கமும் தேர்தல் ஆணையமும் மற்ற அமைப்புகளும் அப்பரிந்துரைகளை அமல்படுத்துவதைக் கட்டாயமாக்கும் வகையில் அறிக்கையின் சொற்களில் சிறு மாற்றங்கள் செய்யப்பட வேண்டும் என்று கோரும் தீர்மானம் ஒன்றை அவர் தாக்கல் செய்தார்.

TAGS: