ஜாஹிட்டிடம் எம்ஏசிசி விசாரணை

இன்று காலை முன்னாள் பிரதமர் அஹமட் ஜாஹிட் ஹமிடி புத்ரா ஜெயாவில் உள்ள மலேசிய ஊழல்தடுப்பு ஆணைய (எம் ஏசிசிசி) தலைமையகம் வந்தார்.

அம்னோ தலைவருமான அவரை வாக்குமூலம் பெறுவதற்காக அழைத்திருப்பதாக எம்ஏசிசி பேச்சாளர் ஒருவர் கூறினார்.

எந்த விவகாரம் தொடர்பில் அவர்மீது விசாரணை நடக்கிறது என்பது தெரியவில்லை.

கடந்த வாரமும் ஜாஹிட் எம்ஏசிசிக்கு அழைக்கப்பட்டிருந்தார் தற்காப்பு அமைச்சின் நிலங்கள் மாற்றிவிடப்பட்ட விவகாரம்மீதான விசாரணைக்கு உதவ.

இதனிடையே ஹரியான் மெட்ரோ, சீனச் சுற்றுப்பயணிகளுக்கு விசா எடுக்க உதவும் ஒரு நிறுவனம்மீது விசாரணை நடப்பதாகவும் அந்த விசாரணைக்கு உதவத்தான் பகான் டத்தோ எம்பி அழைக்கப்பட்டிருக்கிறார் என்றும் கூறியுள்ளது.

அதன் தொடர்பில் நாளை கோலாலும்பூரிலும் ஷா ஆலமிலும் இரண்டு நீதிமன்றங்களில் ஜாஹிட்மீது குற்றம் சாட்டப்படும் எனவும் அச்செய்தித்தளம் கூறிற்று.