தாய்மொழிப் பள்ளிகளை மூட வேண்டும் என்று முன்மொழிந்த ஒரு பாஸ் தலைவர்மீது தேச நிந்தனைச் சட்டத்தின்கீழ் விசாரணை மேற்கொள்ள வேண்டும் என மசீச விரும்புகிறது.
அவரது பேச்சு இனச் சச்சரவுக்கு வழிகோலும் என மசீச மகளிர் தலைவர் ஹெங் சீய் கை கூறினார்.
“அவருடைய கருத்தில் தீவிரவாதம் தொனிக்கிறது, அது மலேசியர்களுக்குத் தாய்மொழிக் கல்வி கற்கும் உரிமையை வழங்கும் அரசமைப்பையும் அவமதிக்கிறது.
“இப்படிப்பட்ட கருத்துகள் பரவுமானால் இனச் சச்சரவைத் தூண்டிவிட்டு தேசிய ஒற்றுமைக்கே ஆபத்தாக முடிந்து விடும்”, என்று ஹெங் ஓர் அறிக்கையில் கூறினார்.