இன்று கோலாலும்பூர் செஷன்ஸ் நீதிமன்றத்தில், வெளிநாட்டவருக்கு விசா வழங்கும் பொறுப்பை ஒரு நிறுவனத்திடம் குத்தகைக்கு விட்டதில் 4.24 மில்லியன் சிங்கப்பூர் டாலர் கையூட்டு பெற்றதாகச் சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகளை முன்னாள் துணைப் பிரதமர் அஹமட் ஜாஹிட் ஹமிடி மறுத்தார்.
முன்னாள் உள்துறை அமைச்சருமான ஜாஹிட், அல்ட்ரா கிரானா நிறுவனத்துக்கு சீனாவில் ஓரிட சேவை மையத்தை நடத்தவும் வெளிநாட்டவருக்கு விசா வழங்குவதற்கான திட்டங்களைக் கவனித்துக்கொள்ளவும் ஏற்கனவே கொடுக்கப்பட்டிருந்த குத்தகையை நீட்டிப்பதற்கு எஸ்$4.24 மில்லியன் கையூட்டு பெற்றதாகக் குற்றஞ்சாட்டப்பட்டது.
அவ்விவகாரம் தொடர்பில் ஜாஹிட் தன்மீது சுமத்தப்பட்ட 7 குற்றச்சாட்டுகளையும் மறுத்தார்.
அவர் குற்றவாளி என்று முடிவாகுமானால் கூடின பட்சம் 20ஆண்டுச் சிறையும் கையூட்டு பெற்ற தொகையைவிட ஐந்து மடங்கு அதிகமான தொகை அபராதமாகவும் விதிக்கப்படலாம்.
இந்த ஏழு குற்றச்சாட்டுகளையும் சேர்த்து ஜாஹிட் மொத்தம் 54 ஊழல் குற்றச்சாட்டுகளை எதிர்நோக்குகிறார்.