அண்மையில் மலேசிய ஊழல்தடுப்பு ஆணையம் (எம்ஏசிசி), 1எம்டிபி பணம் பெற்ற 41 தரப்புகளின் பட்டியல் ஒன்றை வெளியிட்டது நினைவிருக்கலாம்
ஆனால், 1எம்டிபி பணத்தைப் பெற்றவர்கள் அந்த 41 தரப்புகள் மட்டுமல்ல. மேலும் பலரும் 1எம்டிபி பணத்தைப் பெற்றிருக்கிறார்கள் என்று எம்ஏசிசி துணைத் தலைமை ஆணையர் அஸாம் பாகி கூறினார்.
ஆனால், அவர் அவர்களின் பெயர்களை வெளியிடவில்லை.
“இன்னும் நிறைய பேர் இருக்கிறார்கள்”, என்று மட்டும் கூறினார்.
அவர்களும் விசாரணைக்கு அழைக்கப்படுவார்கள் என்றாரவர்.

























