முன்னாள் துணைப் பிரதமர் அஹமட் ஜாஹிட் ஹமிடிமீது நேற்று ஏழு ஊழல் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டன. இன்று அவர் ஷா ஆலம் செஷன்ஸ் நீதிமன்றத்தில் நிறுத்தப்பட்டு அல்ட்ரா கிரானா சென். பெர்ஹாட்டிடமிருந்து ரிம42.7 மில்லியன் கையூட்டு பெற்றதன் தொடர்பில் மேலும் 33 குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டன.
நீதிபதி ரோசில்லா சாலே முன்னிலையில் சுமத்தப்பட்ட அத்தனை குற்றச்சாட்டுகளையும் அந்த முன்னாள் உள்துறை அமைச்சர் மறுத்து விசாரணை கோரினார்.
வெளிநாட்டு விசா முறையையும் சீனாவில் ஓரிட சேவை மையத்தையும் நிர்வகித்து வரும் அல்ட்ரா கிரானா நிறுவனம் அதன் குத்தகைக் காலத்தை நீட்டிப்பதற்கு ஜாஹிட்டுக்கு ரிம42.7 மில்லியன் கையூட்டு கொடுத்ததாம்.