ஜாகிர் நாய்க்கைத் திருப்பி அனுப்பச் சொல்லிக் கோரிக்கை வந்திருப்பது உண்மையே: வெளியுறவு அமைச்சர்

சமயப் போதகர் ஜாகிர் நாய்க்கைத் திருப்பி அனுப்புமாறு கேட்டுக்கொண்டு இந்தியா மலேசிய அரசாங்கத்துக்குக் கடிதம் எழுதியிருப்பதை வெளியுறவு அமைச்சர் சைபுடின் அப்துல்லா உறுதிப்படுத்தினார்.

இந்தியா கேட்டுக்கொண்டிருந்த போதிலும் இந்திய குடிமகனான ஜாகிரை இப்போதைக்குத் திருப்பி அனுப்புவதில்லை என்பதுதான் புத்ரா ஜெயாவின் முடிவு என்றவர் சொன்னதாக ஃப்ரி மலேசியா டுடே கூறியது.

“இந்திய அரசாங்கத்திடமிருந்து அதற்கான விண்ணப்பம் வந்திருந்தது. எப்போது என்பது நினைவில்லை.

“இப்போதைக்கு அதன்மீது எந்த முடிவும் செய்யப்படவில்லை. (இந்த விவகாரத்தில்) ஏற்கனவே செய்யபட்ட முடிவுதான். அதில் மாற்றமில்லை”, என்றவர் கூறினார்.