ஜோகூர் ஆட்சியாளர் சுல்தான் இப்ராகிம், சுற்றுச்சூழலுக்குக் கேடு விளைவிக்கும் தொழில்களை மாநில அரசாங்கம் “ஒரேயடியாக அகற்ற வேண்டும் அல்லது இடமாற்றம் செய்ய வேண்டும்” என்று வலியுறுத்தியுள்ளார்.
பாசிர் கூடாங்கில் மீண்டும் நச்சு வாயு பரவிய சம்பவத்தால் ஆத்திரமுற்ற சுல்தான், இப்படிப்பட்ட தொழில்கள் ஜோகூரிலும் அண்டை நாடான சிங்கப்பூரிலும் உள்ள மக்களுக்கு ஆபத்தாக விளங்குகின்றன என்றார்.
தூய்மைக்கேட்டை உண்டாக்கும் தொழில்களால் கிடைக்கும் பொருளாதார வளத்தைவிட மக்களின் உடல் நலன் முக்கியமானது.
“சுற்றுச்சூழலை மாசுபடுத்தும் தொழில்கள் பொருளாதார வளத்தைக் கொண்டுவருவதாகக் கூறப்படுவது பற்றி எனக்குக் கவலை இல்லை. ஜோகூர் மக்களின் நலன்தான் எனக்கு முக்கியம். பணத்தை விட அது மதிப்புமிக்கது”, என்று சுல்தான் கூறியதாக த ஸ்டார் கூறியுள்ளது.