பெர்சத்து சில திருத்தங்கள் செய்து அமைப்பு விதிகளை வலுப்படுத்திய பின்னரே கட்சித் தேர்தல்களை நடத்தும் என்கிறார் அதன் தலைமைச் செயலாளர் மர்சுகி யஹ்யா.
பெர்சத்துவின் பொதுக் கூட்டத்தில் அத்திருத்தங்கள் செய்யப்படும் என்றாரவர்.
“கிளை, தொகுதித் தேர்தல் தேதிகளை அறிவிக்குமுன்னர் கட்சியின் அமைப்பு விதிகளில் திருத்தம் செய்வது முக்கியமாகும்.
“ஊடகங்கள் பெர்சத்து தேர்தல்களில் மிகுந்த கவனம் செலுத்துவதை நாங்கள் விரும்பவில்லை. நாங்கள் ஒரு புதுக் கட்சி. கட்சி அமைந்து இரண்டே ஆண்டுகள்தான் ஆகின்றன. பலவற்றைச் சீர்படுத்த வேண்டியுள்ளது”, என மர்சுகி கூறினார்.