மலேசிய நிறுவனம் ஒன்று தயாரித்த போத்தல்களில் அடைக்கப்பட்ட நீருக்கு சிங்கப்பூர் தடை விதித்திருப்பது குறித்து சுகாதார அமைச்சு மேல் விசாரணை நடத்தும். போத்தலில் அடைக்கப்பட்ட நீரில் பெக்டீரியா இருப்பது கண்டுபிடிக்கப்பட்டதுதான் தடைவிதிப்புக்குக் காரணம் என்று சொல்லப்படுகிறது.
விசாரணை நடத்துவதற்கு மேலும் தகவல்கள் தேவைப்படுவதாக சுகாதார துணை அமைச்சர் டாக்டர் லீ பூன் சை கூறினார். சம்பந்தப்பட்ட நிறுவனத்தின் பொருள்கள் மலேசியாவிலும் விற்கப்படுவதை அவர் சுட்டிக்காட்டினார்.
“உள்நாட்டில் விற்கப்படும் அதன் பொருள்களும் பாதிக்கப்பட்டிருந்தால் அவை சந்தையிலிருந்து மீட்டுக்கொள்ளப்படும்”, என்றாரவர்.
அந் நிறுவனம் தவறு செய்திருப்பதாக தெரிந்தால் அதன்மீது 1983 உணவுச் சட்டத்தின்கீழ் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் லீ கூறினார்.