முன்னாள் பிரதமர் நஜிப் அப்துல் ரசாக், பல ஆண்டுகள் நீடித்த கம்முனிச ஊடுருவலை எதிர்த்துப் போராடி அம்னோவால் வெற்றிபெற முடிந்தது என்றால் இப்போதைய “கொடூர” பக்கத்தான் ஹரப்பான் அரசாங்கத்தையும் எதிர்த்துப் போராடவும் அந்த மலாய் கட்சியால் முடியும் என்று கூறினார்.
இன்று கோம்பாக் அம்னோ தொகுதிக் கூட்டத்தைத் தொடக்கிவைத்து உரையாற்றிய நஜிப், ஹரப்பானை எதிர்த்துப் போராராட தன்னை மட்டும் தனியே விட்டுவிட்டு ஒதுங்கிக் கொள்ள வேண்டாம் எனவும் கேட்டுக்கொண்டார்.
அம்னோவால் கம்முனிஸ்டுகளைத் தோற்கடிக்க முடிந்தது அதற்குக் காரணம் அன்று அது ஒன்றுபட்டிருந்தது.
“இன்று நாம் தயாராக இல்லையா, துணிச்சல்தான் இல்லையா? எதிர்த்துப் போராடுங்கள்.
“எதற்குப் பயப்பட வேண்டும்? போராட்டத்தில் என்னை மட்டும் தனியே விட்டுவிட்டு ஒதுங்கிக் கொள்ளாதீர்கள்”, என்றவர் கூறினார்.