சொத்து அறிவிப்பில் அரசாங்கம் முன்மாதிரியாக நடந்து கொள்ளவில்லை: ஹிஷாம் சாடல்

எம்பிகள் சொத்து விவரத்தை அறிவிக்க வேண்டும் என்ற சட்டம் எதிரணி எம்பிகளை அவர்களின் சொத்துகளை அறிவிக்க வேண்டும் என்று கட்டாயப்படுத்தும் ஒரு நடவடிக்கையாகத்தான் தெரிகிறது என்கிறார் முன்னாள் தற்காப்பு அமைச்சர் ஹிஷாமுடின் உசேன்.

இவ்விவகாரத்தில் அரசாங்கம் முன்மாதிரியாக நடந்து கொள்ளவில்லை என்றவர் சாடினார்.

பக்கத்தான் ஹரப்பான் எம்பிகளே இன்னும் சொத்து விவரங்களை அறிவிக்காதபோது எதிர்க்கட்சி எம்பிகள் சொத்துகளை அறிவிக்க வேண்டும் என்று கட்டாயப்படுத்து ஏன் என்றவர் வினவினார்.

ஹரப்பான் எம்பிகளில் 12 பேர் இன்னும் அவர்கள் சொத்து விவரங்களை அறிவிக்கவில்லை. அதன் 22 எம்பிகள் அவர்களின் குடும்பத்தினர் சொத்து பற்றிய விவரங்களை அறிவிக்கவில்லை என்றாரவர்.