பாசிர் கூடாங்கில் காற்றுத் தூய்மைக்கேடு திரும்பத் திரும்ப ஏற்படுவதால் அங்கு சட்டவிரோதமாக செயல்படும் அத்தனை தொழிற்சாலைகளும் ஒரு மாதத்துக்குள் மூடப்படும் என்று எரிபொருள், அறிவியல், தொழில்நுட்பம், சுற்றுச்சூழல், பருவநிலை மாற்ற அமைச்சர் இயோ பீ இன் கூறினார்.
“இன்று ஜோகூர் மந்திரி புசாரைச் சந்திப்பேன். சட்டவிரோதமாக செயல்படும் தொழிற்சாலைகள் பற்றிப் பேசப் போகிறோம்”, என்றாரவர்.
“சட்டவிரோதமாக செயல்படும் தொழிற்சாலைகள் பற்றித் தகவல் வைத்துள்ள மக்கள் சுற்றுசூழல் துறையிடம் புகார் செய்யலாம்”, என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.