பிரதமர்துறை அமைச்சர் லியு வுய் கியோங் பிரதமருடன் கேள்வி நேரம் அங்கம் தேவையில்லை என்று சொல்லி 10 நாள்கூட ஆகவில்லை அதற்குள் அவரே அக்டோபர் மாத நாடாளுமன்ற அமர்வு தொடங்கி பிரதமருடன் கேள்வி நேரம் தொடர்ந்து இடம்பெறும் என்று இன்று அறிவித்தார்.
பிரதமர் டாக்டர் மகாதிர் முகம்மட் அடிக்கடி நாடாளுமன்றம் வருகிறார், கேள்விகளுக்குப் பதிலளிக்கிறார் என்பதால் பிரதமருடன் கேள்வி நேரம் என்ற ஒன்று தேவையில்லை என்று லியு முன்பு கூறி இருந்தார்.
”பிரதமரே கேள்விகளுக்குப் பதில் சொல்வதற்கு ஆர்வமாக இருக்கிறார்”, என்றாரவார்.
“எனவே அடுத்த நாடாளுமன்றக் கூட்டத்திலிருந்து அதை வைத்துக்கொள்ளலாம் என நினைக்கிறோம்”, என வொங் சென்(பக்கத்தான் ஹரப்பான் -சுபாங்)னின் கேள்விக்குப் பதிலளித்தபோது அமைச்சர் கூறினார்.